உயர்கல்வியில் ஆராய்ச்சி, மேம்பாடு: இந்தியா - ஜெர்மனி ஒப்பந்தம்

Posted By:

சென்னை: உயர்கல்வியில் ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது தொடர்பாக இந்தியா, ஜெர்மனி நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்தியடவுள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துளள்ளது. இதன்மூலம் இரு நாடுகளிடையே உயர்கல்வியில் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, ஆசிரியர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்தியாவிலிருந்து மாணவர்கள் ஜெர்மனிக்கு சென்று உயர்கல்வி பயில்வது, அங்குள்ள பேராசிரியர்கள் இங்கு வந்து பாடம் சொல்லித் தருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எளிதாகும்.

உயர்கல்வியில் ஆராய்ச்சி, மேம்பாடு: இந்தியா - ஜெர்மனி ஒப்பந்தம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் இந்த முடிவை எடுத்துள்ளது. இரு நாடுகளின் கூட்டு அறிவிப்பான இந்த ஒப்பந்தம் 2016 முதல் 2020 வரை அமலில் இருக்கும்.

இரு நாடுகளிடையே உயர்கல்வித்துறையை வலுப்படுவதன் மூலம் நாட்டில் கல்வி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இரு நாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியடையும். இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைவர் என்றார் அவர்.

English summary
Today, the government approved a proposal to fortify ties between India and Germany in the higher education sector. The focus will be on the field of research, skill development and faculty development. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi gave its approval to the enhanced ties with the signing of Joint Declaration of Intent (JDI) between the two countries with some minor amendments in the earlier MoU. The JDI will facilitate implementation of 'Indo-German Partnerships in Higher Education'.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia