ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்த கேஐஎஸ்எஸ் பல்கலை.!!

Posted By:

சென்னை: ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழக மாணவர்கள் படைத்துள்ளனர்.

மனித சங்கிலி

மிக நீண்ட மனித வாக்கியம், ஒரே மாதிரியான ஹை-ஃபைவ்ஸ், 30 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட தூர மனிதச் சங்கிலியை அமைத்துள்ள கின்னஸ் சாதனைகளை அவர்கள் படைத்துள்ளனர்.

மனித வாக்கியம்

இதில் மிக நீண்ட மனித வாக்கியம், மிக நீண்ட தூர மனிதச் சங்கிலி ஆகியவை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

 

 

மிகப் பெரிய இன்ஸ்டிடியூட்

உலகின் மிகப் பெரிய பழங்குடி மாணவர்கள் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்ஸ்(கேஐஎஸ்எஸ்) இதற்கான ஏற்பாடுளைச் செய்திருந்தது.

 

 

புவனேஸ்வரில்

இந்தச் சாதனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வர் நகரில் நிகழ்த்தப்பட்டது.

 

 

15,225 மாணவர்கள்

சுமார் 15,225 கேஐஎஸ்எஸ் மாணவர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தச் சாதனையைப் படைத்தனர். உலக அமைதிக்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

 

 

வாக்கியம் போல...

மாணவர்கள் வாக்கியம் போல நின்று ‘WE URGE FOR WORLD PEACE' என்ற வாக்கியத்தை உருவாக்கினர்.

 

 

ஹை-பைவ்ஸ்

இதைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில் மனிதச் சங்கிலியை (ஹை-பைவ்ஸ்) உருவாக்கினர். இதில் 25,151 பேர் பங்கேற்றனர்.

துபாய் சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு 6,598 பேர் மனிதச் சங்கிலியை உருவாக்கியதே சாதனையாக இருந்தது. இது கடந்த நவம்பர் மாதம் துபாயில் நிகழ்த்தப்பட்டது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்

இந்தச் சாதனைகளுக்கான சான்றிதழ்களை கேஐஎஸ்எஸ் பல்கலை நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தாவிடம் கின்னஸ் புத்தக அதிகாரிகள் வழங்கினர்.

 

 

நவீன் பட்நாயக்

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia