சுதந்திரம் இந்தியாவின் இனியதொரு ஆரம்பம்

Posted By:

இந்தியசுதந்திரதின கொண்டாட்டம் அடபோங்கடா சுதந்திரமா சுண்டையகாயாவது என்னத்த சுதந்திரம் வாங்கி என்னத்த கிழிச்சோம் .
அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இதில் எவன் சுதந்திரத்தை பற்றி யோசிப்பான் டைம் வேஸ்ட் எனர்ஜி வேஸ்ட் ,இன்னைக்கு பெரிய டாப்பிக்கே வேறப்பா !!!,,, என்று இந்த இளைஞர்கூட்டம் பற்றி பேச்சு இன்று பரவலாக இருக்கின்றது . ஆனால் இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் வேகமும் செயல்பாடும் கணிக்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது . 

தேசத்தை சுதந்திரம் மூலம் பெற்றனர் நம் முன்னோர்கள் ஆனால் இன்று அதனை காக்கும் பொருப்பை இந்திய இளைஞர்கள் தோலில் சுமக்க தருணத்தை உருவாக்கி கொண்டிருக்கின்றர்.

சுதந்திர தாகம் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விடுதலை   முழக்கம்

1946 இடைக்கால அரசாங்கம் அமைக்க இம்சித்த இங்கிலாந்தின் அழைப்பை நிராகரித்து முழு சுதந்திர அரசு வேண்டி நின்று எஃகு உறுதிகாத்து நின்றது. ஆனாலும் நேரு இடைக்கால அரசை ஏற்க ஜின்னா அதனை எதிர்த்தார் .

கிளமண்ட் அட்லி

பிரிட்டிஸ் அரசு கிளமண்ட் அட்லி விடுதலைக்கான அறிவிப்பை கொடுத்தார் . இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்தார் . 1948 ஜூன் முதல் தேதிக்குள் இந்தியாவில் முற்றிலுமாக பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவுக்கு வரும் என்றார் .

வேவல் அழைக்கப்பட்டு மௌண்ட்பேட்டன் பிரபு வைசிராயாக 1947 மார்ச் 22 ஆம் நாள் பதவியேற்றார். இந்திய சுதந்திர அறிக்கையை உறுதிப்படுத்திய திட்டமே மௌண்ட்பேட்டன் திட்டம் ஆகும் .

இந்திய தேசத்தின் விடுதலைக்காக இரும்பைவிட
எஃகு போல் உறுதிகாத்த கனவான்களுக்கான
அறிவிப்பு
தண்டூண்டி நடந்து தட்டுநிறைய லட்டுகொடுத்து பெற்ற சுதந்திரமல்ல
குண்டடியில் குற்றுயிறும் குலையுயிருமாய்  நின்று போராடி பெற்ற சுதந்திரம் .
உன்னையும் என்னையும் எட்டுத்திக்கெங்கும் சென்றுவர தன்னை
கொன்று பெற்ற பெரியோர்கள் பெற்றுகொடுத்த சுதந்திரம் !!!

சுக்கையும் மிளகையும் சுரண்ட வந்த கூட்டம் சுற்றும் முற்றும் பார்த்து நமது சுதந்திரத்தையும் சரண்டி நின்றது .
மக்காக நிக்காமல் மன்றாடியும் மடைதிரண்ட வெள்ளமாகி பொங்கி பெற்றோம் சுதந்திரம் பேணிகாப்போம் சுதந்திரத்தை .

இந்திய விடுதலைச் சட்டம் 1947 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது . இந்தியா இருகூராக   பிரிக்கப்பட்டது . பிரிட்டிஸ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவை 1947 ஜூலை 18 இல் சட்டமாக்கியது .

நாடுமுழுவதும் சுதந்திரவேக்கை மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் நிலைக்கு கொண்டு சென்றது . இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் தருணத்திற்கு தயாராக கொண்டிருந்தது .
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொரு பக்கம் சுதந்திர கோஷம் ஆரம்பம் வெற்றியானால் , ஜப்பானிலும் ,இரஷ்யா, போன்ற நாடுகளின் உதவியோடு ஆய்த்தமான ஆஷாத் ஹிந்த் ஆங்கில படைகளை பலமிழக்க வைத்த பெருமையில் ஒரு பக்கமென சுதந்திர மூச்சை இந்தியாவிற்கு கொடுத்து மறுபக்கம் தன் சுவாசத்தை காப்பற்றி வெளியேறியது பிரிட்டிஸ் அரசு .

எழுபது வருடங்கள் கழிந்து இன்னும் எட்டிப்பார்க்கத்தோன்றும் இரத்த சரிதம் போன்றது என்றுரைக்கும் என் தேசியத்து இளைஞர்கள் முழக்கத்தில் என்றும் விழிக்கச் செய்யும் இந்த தேசம்

சார்ந்த பதிவுகள்:

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது 

மக்கள் குடியரசு தலைவரின் இரண்டாமாண்டு வானுலக பிறந்ததினம் நினைவு கூறுவோம்

கார்கில் வெற்றியினை கொண்டாடும் இந்திய இளைஞர்கள் மாணவர்கள்

English summary
above article tell about Indian Independence day special event

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia