தமிழக பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

Posted By:

தமிழக பள்ளிகளின் தரம் உயர்த்த தரமான கல்வி உபகரணங்கள் கற்றல் அத்துடன் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தமிழ்க பள்ளி கல்வித்துறை .
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்க்கோட்டையன் அவர்கள் தமிழகத்தில் பத்தாயிரம் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டுவது தொடர்பாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சம்பத் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் .

நவீன கழிப்பறை, சுற்றுசுவர், குடிநீர்,விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

தமிழக பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த தரமான பாடத்திட்டங்களை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்க பாடத்திட்டங்கள் தேசிய அளவில் தரமானதாக உருவாக்க குழுவமைத்துள்ளது. தமிழக பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிகளின் சுற்றுசுவர், பள்ளிகளின் குடிநீர் வசதி, நல்ல தரமான விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஈடுப்பட்டுள்ளார்.

நவீன கழிப்பறை, சுற்றுசுவர், குடிநீர்,விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

தமிழக பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்காக முதற்கட்டமாக பத்தாயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த தொழில் நிறுவனங்களை அதில் ஈடுபடுத்த பேச்சு வர்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ரொனால்ட் நிசான், சாம்சங், ஹூண்டாய் நிறுவனங்கள் ,செயின் கோபைன், டெய்ம்லர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இத்தைகய பேச்சு வார்த்தையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பள்ளி கல்லுரிகளின் தரத்தை மேம்படுத்தல் மூலம் நல்ல கல்வி சூழலை மேம்படுத்தலாம் . அத்துடன் தனியார் நிறுவனங்களை அதில் ஈடுபடுத்துவதன் மூலம் அந்நிறுவனங்களின் உதவியை தமிழ அரசு பெறுவதுடன்  நவீன் மாற்றங்களை புகுத்த நிறுவனங்களின் ஆலோசணையும் பெறலாம் .  

சார்ந்த பதிவுகள்:

மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் தகவல் 

தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை 

மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது 

அரசு பள்ளி ஆசியர்களின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து உயர்நீதிமன்றம் கவலை 

English summary
above article tell about increasing infrastructure of tamilnadu schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia