தனியார் பள்ளிகளில் நீட் தேர்வு சிறப்பு வகுப்புகள் பெயரில் கட்டண கொள்ளை

Posted By:

நீட் தேர்வை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகூடங்கள் இந்தாண்டு நீட் தேர்வு வந்தது மருத்துவ மாணவர்களுக்குத்தான் தலைவலியை ஏற்ப்படுத்திகிறதென்று பார்த்தால் , பள்ளி மாணவர்களையும் பாடாய் படுத்துகிறது .

நீட் தேர்வை வைத்து  கல்லாக்கட்டி புதுகட்டண கொள்கையை தவணை முறையில் வழங்கும் பள்ளிகள்

நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்ப்படுகிறது . நீட் தேர்வு எழுதுவதன் காரணமாக வைத்து அதற்கான பயிற்சி வகுப்புகள் என அதற்கென்று தனி கட்டணம் ரூபாய் 20,000 முதல் அதிகரிக்கின்றது.
நீட் தேர்வு எழுதுவதற்க்கான பயிற்சிகள் ஆரம்பிப்பது முதல் அவர்களுக்கான ஸ்பெஷல் வகுப்புகள் என அதிகரித்து காணப்படுகிறது . புத்தகங்கள் வழங்குவது டெஸ்ட்கள் நடத்துவது என மாணவர்களை பாடாய் படுத்த பள்ளிகள் துவங்கிவிட்டன.  நீட் தேர்வுக்கு செலுத்த வேண்டிய பயிற்சி கட்டணத்தை சில பள்ளிகள் 3 தவணையாக செலுத்த கால அவகாசம் கொடுத்தும் உள்ளன. பள்ளிகள் தொடங்கிய இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை அனைத்தையும் செலுத்த வேண்டிய கட்டண தொகை ஒரு பக்கம் அத்துடன் நீட் தொகை மறுபக்கமாக பெற்றோர்கள் சுமை இப்படியாக அதிகரித்து கொண்டே செல்கிறது .
நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கான இனிமேல் இரண்டுமணி நேரம் கூடுதல் வகுப்புகளால் மிகுந்த சிக்கலில் இருக்கின்றனர். அத்துடன் நீட் தேர்வுக்கு தனி ஆசிரியர்கள் குழு அமைக்க திட்டமிட்டுள்ளது . 

நீட் தேர்வு மாணவர்களை கவலை அடைய வைக்கின்றது மேலும் இது மாணவர்களின் மன உலைச்சலை அதிகப்படுத்துகிறது.    அகில இந்திய அளவில் போட்டடி போட   முடியுமா என்ற எண்ணம்  மாணவர்களை  சிந்திக்க வைக்கின்றது . ஆனால் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களால் இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடியும் ,ஏனென்றால் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ  பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகிறது . சிபிஎஸ்இ தரத்திற்கேற்ப தமிழ்நாடு அரசு தயாரிக்கும் பாடத்திட்டங்கள் அமலுக்கு வருமபொழுதுதான் அதன் தரம் அறிய முடியும் . இச்சிக்கல்களை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு தரமான பாடத்திட்டங்களை தர வேண்டும் . 

English summary
here article tell about neet fees structure and classes in private schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia