வருமான வரித் துறையில் வேலை!

Posted By:

கொல்கத்தா : வருமான வரித்துறையில் 2017ம் வருடத்திற்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரி உதவியாளர் உட்பட 12 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சார்ந்த புகழ் வாய்ந்த பல பணிகளை திறமையாக செய்யக் கூடியவர்களும் (மல்டி டாஸ்க் பணியாளர்) விண்ணப்பிக்கலாம்.

வருமான வரித் துறையில் வேலை!

வேலை - வரி உதவியாளர் / எம்டிஎஸ்

கல்வித் தகுதி - 10ம் வகுப்பு / பட்டப்படிப்பு

அனுபவம் - பிரசர்ஸ்

காலியிடம் - 12

ஊதியம் - ரூபாய் 5,200 முதல் ரூபாய் 20,200 வரை / மாதம்

வேலை இடம் - வெஸ்ட் பெங்கால், சிக்கிம்

கடைசி தேதி - 10 ஏப்ரல் 2017

விரிவான தகவல்கள்

வரி உதவியாளர் - காலியிடம் 10,

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டேட்டா எண்ட்ரி ஒரு மணி நேரத்திற்கு 8000 எழுத்துக்களை விரைவாக இயக்க வேண்டும்.

வயது வரம்பு - 18 முதல் 27 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மல்டி டாஸ்கிங் ஊழியர் - காலியிடம் 2

மெட்ரிக்குலேசன் அல்லது அதற்கு இணையானத் தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்விவாரியத்தில் பயின்றிருக்க வேண்டும்.

18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

நேர்முகத் தேர்வு, ஆளுமை சோதனை மற்றும் கணிணித் திறன் தேர்வின் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி -

வருமான வரி துறை இணை ஆணையர்,
தலைமையகம் (பணியாளர் மற்றும் ஏற்படுத்துதல்),
முதல் மாடி, அறை எண் 14,
ஆயக்கார் பவன், பி - 7, சவ்ரிங்கி சதுக்கம்,
கொல்கத்தா-700069

English summary
Income Tax Recruitment 2017 for the post of Tax Assistant, Multi Tasking Staff from Meritorious Sportspersons.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia