பிளஸ் ஒன் வகுப்பு சேர்கைக்கு அறிவிக்கப்படாத கட்டண வசூலிப்பு அரசு பள்ளிகள் கொள்ளை

Posted By:

பிளஸ் ஒன் வகுப்பில் சேர முறைப்படுத்தபடாத கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் சேர 400 மதிபெண் குறைவாக பெற்ற மாணவர்களிடையே எந்த அறிவிப்பும் இன்றி ரூபாய் 3000 கட்டண தொகையாக பெறப்படுகிறது . பதினொன்றாம் வகுப்பு கலைப்பிரிவில் சேர்க்கைக்கு கட்டாய கட்டண வசூலிப்பு திருப்பூர் சின்னச்சாமியம்மாள் அரசு உயர்நிலை பள்ளியில் வசூலிக்கப்படுகின்றன . அவ்வாறே மாநிலத்தின் பல்வேறு அரசு பள்ளியில் கலைபிரிவில் வரலாறு பாடத்தில் மாணவர் சேர்கைக்கு ரூபாய் 1500 முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு முறையான இரசிது வழங்கப்படுவதில்லை.

பிளஸ் ஒன் வகுப்பு சேர்க்கைக்கு இரசிதில்லா கொள்ளை

காஞ்சிபுரம் நாயக்கன்பேட்டையிலும் மாணவரிடையே 1350 வசூலிக்கப்பட்டது .கேள்விகள் கேட்டால் சரியான பதிலும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இதனால் ஆங்காங்கே பள்ளிகளில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது. தட்டி கேட்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் சேர்கைக்கு ஏதேனும் சிக்கல் எழுமோ என்று பய உணர்வின் காரணமாக தட்டிகேட்க முற்ப்படும் பெற்றோர்களும் வேறு வழியின்றி கட்டணம் செலுத்துகின்றனர் .

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய அறிவிக்கப்ப்டாத சுரண்டல்கள் நடக்கின்றன . 

English summary
here article mentioned about offense of Government school fees collection

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia