வெளிநாட்டு மாணவர்கள் வசதிக்காக 8 நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஐஐடி!!

Posted By:

சென்னை: வெளிநாட்டு மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 8 நாடுகளில் பொது நுழைவுத் தேர்வு ஐஐடி உயர் கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.

நாட்டிலுள்ள ஐஐடி-களில் மாணவர், மாணவிகள் சேர்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைப் போலவே வெளிநாடுகளிலும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்கள் வசதிக்காக 8 நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஐஐடி!!

அவர்களின் வசதிக்காக 8 நாடுகளில் அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வை ஐஐடி நடத்தவுள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தினர். இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல்(2017) இந்தத் தேர்வு அந்த நாடுகளில் நடைபெறும் என்று மத்திய மனித வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது ஐஐடி-யில் இந்திய மாணவர்களை சேர்ப்பதற்காக மட்டுமே நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறோம். வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்கள் மட்டும்தான் இந்தத் தேர்வை எழுத முடியும். ஆனால் தற்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த வாய்்பு வழங்கப்படவுள்ளது. அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்படுவர் என்றார் அவர்.

English summary
In a bid to attract more international talent, the prestigious IITs for the first time are planning hold their entrance tests in Singapore, UAE, Ethiopia and SAARC nations next year to select foreign students for undergraduate and postgraduate courses. At recent a meeting between officials of HRD and External Affairs ministries, eight countries including Afghanistan, Bangladesh, Nepal, Pakistan and Sri Lanka (all SAARC member nations), Ethiopia in Africa, Singapore and Dubai (UAE) have been zeroed in on for holding entrance tests for foreign nationals from next year onwards.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia