மத்திய அரசின் சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அறிமுகம்

Posted By:

சென்னை: இந்திய சுற்றுலா, போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முழு நேர எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள உள்ள கல்வி நிறுவனம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இது இயங்கி வருகிறது. இதுவரை இந்தக் கல்வி நிறுவனத்தில் இதுவரை முதுநிலை பட்டயப் படிப்புகளே வழங்கப்பட்டு வந்தன. இப்போதுதான் முதன் முறையாக எம்.பி.ஏ. சுற்றுலா, சரக்கு முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அறிமுகம்

பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 6-ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பப் படிவம், கட்டண் உள்ளிட்ட இதர விவரங்களுக்கு www.iittmsouth.org என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் தொடர்புகொள்ளலாம்.

மேலும் 0861- 2353199, 08978878710, 09849739489, 09866274850 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் விவரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

English summary
IITM which is situated in Andhra Pradesh has launched MBA courses from this academic year. Students can apply for this courses before july 6, 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia