கேம்பஸ் இன்டர்வியூவில் ஐஐடி ரோபார் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு வேலை!!

Posted By:

சென்னை: கேம்பஸ் இன்டர்வியூவில் ஐஐடி ரோபார் உயர்கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் 80 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஐஐடி ரோபார் உயர் நிறுவனத்தில் அண்மையில் வளாகத் தேர்வு நடைபெற்றது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், பேபால், அரிஸ்டா நெட்வொர்க்ஸ், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், கோலா இந்தியா நிறுவனம், ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ்மெண்ட், ஸ்டீல்வெட்ஜ், அக்ஸடிரியா, கிளிக் லேப் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

கேம்பஸ் இன்டர்வியூவில் ஐஐடி ரோபார் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு வேலை!!

இந்த வளாகத் தேர்வில் 80 சதவீத மாணவ, மாணவிகளை நிறுவனங்களைத் தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கின. மொத்தம் 71 மாணவர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சராசரியாக ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் கிடைக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் கூடுதல் சராசரி ஊதியம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஐஐடி ரோபார் தலைவர் (பயிற்சி மற்றும் பணியமர்த்துதல்) டாக்டர் ரவி மோகன் பிரசாத் கூறியதாவது: 2016-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பி.டெக் மாணவர்கள் இந்த வளாகத் தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் 80 சதவீதம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றார் அவர்.

English summary
IIT Ropar saw a successful placement season with a total of 71 students placed so far. An average package of over 12 lakhs per annum was offered to students this year, an increase of 10 per cent compared to the last season. Premier companies such as Amazon, Google, Microsoft, PayPal, Arista Networks, Texas Instruments, Larsen & Toubro, Mahindra & Mahindra, Tata MotorsBSE 0.89 %, Coal India Limited, Anglo Eastern Ship Management, Steelwedge, Axtria and Click Labs were some of the major recruiters.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia