ரூர்க்கி ஐஐடி-யில் எம்.டெக்., எம்.ஆர்க். படிக்க வேண்டுமா...!!

Posted By:

புதுடெல்லி: ரூர்க்கியிலுள்ள உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் எம்.டெக்., எம்.ஆர்க் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2 ஆண்டு படிப்பான இந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.

ரூர்க்கி ஐஐடி-யில் எம்.டெக்., எம்.ஆர்க். படிக்க வேண்டுமா...!!

இந்த படிப்பில் சேர்வதற்கு பி.ஆர்க்., பி.டெக் முடித்திருக்கவேண்டும் அல்லது அதற்கு ஈடான பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் ஐஐடி ரூர்க்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்விலும் வெற்றி பெறவேண்டும்.

சேர்க்கைக்காக விண்ணப்பிக்க இங்கு http://pgadm.iitr.ernet.in/Default.aspx கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் விவரங்களுக்கு http://pgadm.iitr.ernet.in/Docs/PG%20Information%20Brochure.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பெறலாம்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 10 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி ஏப்ரல் 12 ஆகும்.

English summary
Applications have been invited by Indian Institute of Technology (IIT) Roorkee, for admission into 2 years Master of Technology (M.Tech) and Master of Architecture (M.Arch) programmes. Admissions are offered in various programmes for the session 2016-17. Eligibility Criteria: M.Tech Programmes: Candidates should have completed bachelor's degree in any branch of Engineering or equivalent respectively M.Arch Programme: Candidates must have Bachelor of Architecture (B.Arch) or its equivalent degree

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia