ஐஐடி-யில் 200 சதவீத கட்டண உயர்வுக்கு ஒப்புதல்: ஆனா...மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கல....!!

Posted By:

புதுடெல்லி: ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் 200 சதவீத கட்டண உயர்வுக்கு ஐஐடி குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவெடுக்கவில்லை.

2016-17-ம் கல்வியாண்டில் ஐஐடி பயிற்சிக் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஐஐடி குழு ஒப்புதல் அளித்தது. இதன்படி தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ள கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். ஆனால் இதற்கான ஒப்புதலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்னும் அளிக்கவில்லை.

ஐஐடி-யில் 200 சதவீத கட்டண உயர்வுக்கு ஒப்புதல்: ஆனா...மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கல....!!

கட்டணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐஐடி கவுன்சில் நிலைக் குழு (எஸ்சிஐசி) வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஐஐடி-யில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கு ஆகும் செலவில் 60 சதவீதத்தை மாணவர்களிடமிருந்து பெறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இந்தக் குழுவில் பம்பாய், மெட்ராஸ், கான்பூர், ஹைதராபாத் ஐஐடி குழுவினர் உள்ளனர்.

ஒவ்வொரு மாணவருக்கு சராசரியாக ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. எனவே கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்தோம்.

ஆனால் இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசு முடிவெடுக்கும் வரை தற்போதுள்ள கட்டணமே தொடரும். ஆனால் அதே நேரத்தில் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், வட்டி இல்லாத கல்விக் கடனை வித்யாலஷ்மி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Seeking admission into IITs for the academic year 2016-2017 may prove costly for students, as IIT approved 200% fee hike in annual tuition fees, up from Rs 90,000 to Rs 3 lakh for undergraduate students. However, the final decision on the hike should require approval from HRD minister Smriti Irani. The Standing Committee of IIT Council (SCIC), which met on Thursday, analysed the average cost per student and come out with a suggestion that 60% should be collected from students. A panel, comprised the directors of the Bombay , Madras, Kanpur and Hyderabad IITs, had prepared a draft - 'Roadmap to Financial Autonomy of IITs' in consultation with the HRD and finance ministries, in which it recommended the hike. Thus, the panel had stated, would be enough to cover costs incurred by way of salaries and maintenance.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia