IIT Madras Electric Racing Car 2022:பார்முலா ஒன் ரேஸ் எலக்ட்ரிக் கார் வடிவமைத்து சாதனை....!

ஐஐடி பார்முலா ஒன் ரேஸ் எலக்ட்ரிக் கார் 2022

சென்னை ஐ.ஐ.டி.யின் பல்வேறு துறைகளை சேர்ந்த 45 மாணவர்களை கொண்ட 'ரப்தார்' என்ற பார்முலா கார் வடிவமைப்பு குழுவினர் மின்சாரத்தில் இயங்கும் பந்தயக் கார் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில், இந்த கார் முதல் முறையாக மின்சாரத்தில் தயாரிக்கப்பட்ட பந்தயகார் ஆகும். ஓராண்டு மேற்கொண்ட முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள 'ஆர்.எப்.ஆர். 23' என்ற இந்த மின்சார பந்தயக்காரை சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் வி.காமகோடி அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை ஐ.ஐ.டி., மின் பந்திய கார்..!

இந்த நிகழ்ச்சியில் ரப்தார் மாணவர் குழுவின் ஆலோசகர் பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்திரி மற்றும் மின்சார பந்தயக்காரை உருவாக்கிய ரப்தார் மாணவர்கள் குழு தலைவர் கார்த்திக் கருமஞ்சி மற்றும் சக மாணவர்கள் உடன் இருந்தனர்.

சென்னை ஐ.ஐ.டி., மின் பந்திய கார்..!

ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது

இந்த கார் மின்சாரத்தில் இயங்குவதால் குறைந்த செலவில் அதிக அளவிலான வேகத்தில் மிகவும் சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது 4 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் ஆகும். இந்த காரில் பேட்டரி பயன்படுத்தும் முறை மற்றும் தெர்மலை கையாளும் முறையானது மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த எடை உள்ள பேட்டரியில் அதிக செயல் திறன் கிடைக்கிறது. இந்த பந்தயக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரியானது மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளதால், இதே போன்ற முறையில் தயாரிக்கப்படும் பேட்டரிகளை மக்கள் தங்கள் காரில் பயன்படுத்தும்போது தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

சென்னை ஐ.ஐ.டி., மின் பந்திய கார்..!

இந்த கார் இரும்புக்கு பதில் 'கம்பாசிட்' என்ற மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பந்தய காரனது வரும் ஜனவரியில் கோவையில் நடைபெற உள்ள 'பார்முலா பாரத்' நிகழ்ச்சியிலும், ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் நடைபெறும் 'பார்முலா ஸ்டுடண்ட் ஜெர்மனி' நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளது.

அடுத்தகட்டமாக டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ரப்தார் மாணவர்கள் குழு தலைவர் கார்த்திக் கருமஞ்சி கூறும்போது, "இந்த பந்தயக்காரை உருவாக்க எங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் தேவைப்பட்டது.

இதனை 20-க்கும் மேற்பட்ட ஸ்பான்சர்கள் வழங்கி உள்ளனர். இந்த காரை உருவாக்குவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு திட்டமிட்டோம். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காரை உருவாக்க தொடங்கினோம்.

சென்னை ஐ.ஐ.டி., மின் பந்திய கார்..!

நாங்கள் 45 பேரும், தினசரி பாட வகுப்புகள் முடிவடைந்தவுடன் மின்சார பந்தயக்காரை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். தினசரி 8 மணி நேரத்திற்கும் மேல் அதில் செலவிடுவோம். என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இடையே தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

எனவே, கோவையில் நடைபெறும் பார்முலா கார் பந்தயத்திலும், ஜெர்மனியில் நடைபெறும் பந்தயத்திலும் நாங்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்போம் என்று நம்புகிறோம்" என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Chennai, Student Achievement 2022: Team Raftar from IIT Chennai has designed an electric racing car. All technologies and components are manufactured at IIT Chennai. The ICAR has been named RF 23.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X