‘தல’ தோனிக்கு உதவி பண்ண நீங்க ரெடியா? ஐஐடி மெட்ராஸ் தேர்வில் சிஎஸ்கே கேள்வி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து ஐஐடி மெட்ராஸ் பருவத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தல’ தோனிக்கு உதவி பண்ண நீங்க ரெடியா? ஐஐடி மெட்ராஸ் தேர்வில் சிஎஸ்கே கேள்வி..!

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றில் காலடி எடுத்து வைத்துவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய 10 தொடரிலும் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது நம்ம சிஎஸ்கே அணி மட்டும் தான். அதெல்லாம் சரி, இப்ப மேல உள்ள தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தானே கேட்குறீங்க.?

சிஎஸ்கே-கு விசில் போடு..!

சிஎஸ்கே-கு விசில் போடு..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்க, நம்ம மெட்ராஸ் ஐ.ஐ.டி-யில் ரசிகர்கள் இருக்கமாட்டாங்களா பாஸ். அந்த ரசிகர்களுக்காகவே தேர்வு வினாத்தாளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி.!

சென்னை ஐ.ஐ.டி.!

சென்னை ஐ.ஐ.டி-யில் மெட்டீரியல் அண்டு எனர்ஜி பேலன்ஸ் ( Material and Energy Balance) தேர்வு (End Semester Exam) நடைபெற்றுள்ளது. அந்த வினாத்தாளின் முதல் கேள்வியே, "பகல் இரவு கிரிக்கெட் போட்டியில் பனியின் தாக்கம் என்ன விதமான பங்களிப்பை அளிக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இந்தக் காலநிலை மாற்றம் சிரமத்தை ஏற்படுத்துமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் மே 7ம் தேதி நடைபெறும் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி வானிலை நிலவரப்படி சென்னையில் ஈரப்பதம் 70 சதவிகிதம் அதிகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போட்டி தொடங்கும்போது வெப்பநிலையில் 39 செல்சியஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி பேட்டிங் செய்ய வேண்டுமா?
 

தோனி பேட்டிங் செய்ய வேண்டுமா?

இது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும்போது இந்த வெப்பநிலையானது 27 செல்சியஸ் இருக்கும். இந்தத் தகவலின்படி, இந்தப் போட்டியில் டாஸ் வென்றால் தோனி பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது பந்துவீச வேண்டுமா? நீங்கள் எதைச் செய்யக் கூறுவீர்கள். உங்களது பதிலை 5 பாயிண்டுகளில் கூறுங்கள்'' எனக் கேட்கப்பட்டுள்ளது.

வைரலான ஐஐடி

வைரலான ஐஐடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து ஐஐடி மெட்ராஸ் பருவத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வியின் புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Madras Question What Should Dhoni Do If He Wins The Toss
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X