மெட்ராஸ் ஐஐடி-யில் உதவி்த்தொகையுடன் பிஎச்.டி, எம்எஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்!

Posted By:

சென்னை: மெட்ராஸ் ஐஐடி-யில் உதவித்தொகை வசதியுடன் பிஎச்.டி., எம்.எஸ். படிப்புகளை படிப்பதற்கான அருமையான சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

2016-ம் கல்வியாண்டில் தொடங்கவுள்ள படிப்புகளுக்கான உதவித்தொகைத் திட்டமாகும் இது.

மெட்ராஸ் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள் உதவித்தொகையைப் பெற வேண்டுமானால் அவர்கள் பி.இ., பி.டெக், எம்.எஸ்சி படிபப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மெட்ராஸ் ஐஐடி-யில் உதவி்த்தொகையுடன் பிஎச்.டி, எம்எஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்!

மேலும் கேட், நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் முதல் 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து 3-வது ஆண்டு வரை மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இதேபோல எம்.எஸ். படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

எம்.எஸ். படிப்பில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்புபவர்கள் கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் அவர்களது படிப்புத் தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in என்ற மெட்ராஸ் ஐஐடி-யின் இணையதளத்தைக் காணலாம்.

English summary
Indian Institute of Technology (IIT), Madras has invited applications for Research Scholarships 2016 for students pursuing their regular, direct, interdisciplinary, external/part-time Doctor of Philosophy (Ph.D) and Master of Science (M.S) programmes offered in the various departments for the Jan-May and July-November sessions 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia