ஐஐடி மெட்ராஸில் பிஎச்.டி. சேர்க்கை அறிவிப்பு

Posted By:

சென்னை: ஐஐடி மெட்ராஸில் பிஎச்.டி. படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மெட்ராஸ் ஐஐடி-யில் என்ஜினீயரிங், அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பிஎச்.டி. படிப்புகளில சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களாகும் இது.

ஐஐடி மெட்ராஸில் பிஎச்.டி. சேர்க்கை அறிவிப்பு

எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்கள் என்ஜினீயரிங், தொழில்நுட்பப் பிரிவுகளில் பிஎச்.டி. சேரலாம்.

விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேர்கலாம்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 4 ஆகும். நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வில் ஆகியவை நவம்பர் 7 முதல் நவம்பர் 29-ம் தேதிக்குள்ளாக நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு ஐஐடி மெட்ராஸின் அதிகாரப்பூர்வமான இணையதளமான -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Institute of Technology (IIT), Madras has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programmes in Engineering, Sciences, Entreprenurship/Management, Humanities & Social Sciences for January-May and July-November sessions 2016. For more information visit the college website http://www.iitm.ac.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia