மெட்ராஸ் ஐஐடி-யில் ஒருங்கிணைந்த எம்ஏ படிக்க ஆசையா இருக்கா?

Posted By:

சென்னை: மெட்ராஸ் ஐஐடி-யில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளைப் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது 5 ஆண்டு படிப்பாகும். இந்தப் படிப்புகளைப் படிப்பதற்காக தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மெட்ராஸ் ஐஐடி-யில் ஒருங்கிணைந்த எம்ஏ படிக்க ஆசையா இருக்கா?

இதற்காக ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வை(எச்எஸ்இஇ) எழுதி வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்திலிருந்து 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தது 5 பாடங்கள் உள்ள தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு பொதுப் பள்ளி, வாரியம், பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iitm.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia