மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!

Posted By:

டெல்லி: மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் ஒருங்கிணைந்த எம்.ஏ படிப்பு (ஆங்கிலம்), எம்ஏ (வெலப்மெண்ட் ஸ்டடீஸ்) ஆகிய படிப்புகளில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்தத் தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். தாள் 1, தாள் 2 என இரு தேர்வுகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iitm.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Result date for Humanities & Social Sciences Entrance Examination (HSEE) 2016 has been announced by Indian Institute of Technology (IIT), Madras. HSEE exam was held on April 17 and the results for the same will be released on May 11. The entrance exam is conducted to offer admissions to integrated Master of Arts (M.A) in Development Studies and integrated M.A in English studies programmes for the session 2016. Educational Qualification: Candidates must have passed class 12 from a recognised board or institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia