வேலைவாய்ப்பு தருவதில் உலக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த காரக்பூர் ஐஐடி!!

Posted By:

சென்னை: வேலைவாய்ப்பு தருவதில் உலக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது ஐஐடி காரக்பூர்.

இதன்மூலம் ஐஐடி காரக்பூரில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு தருவதில் உலக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த காரக்பூர் ஐஐடி!!

இந்த ஆய்வு முடிவுகளை குவாக்குரேலி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐஐடி காரக்பூர் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல பாம்பே ஐஐடி-யும் தரவரிசைப் பட்டியலில் வந்துள்ளது. அந்த ஐஐடி 93-வது இடத்தைப் பெற்றது.

இதில் ஐஐடி மெட்ராஸ் 119-வது இடத்தையும், ஐஐடி டெல்லி 160-வது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் 175-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலலில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்டான்போர்ட் பல்கலை, எம்ஐடி, ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் ஆகியவை பிடித்துள்ளன.

ஐஐடி காரக்பூரில் படிக்கும் மாணவர்கள் சரியாக 1500 பேர் நல்ல வேலையைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia