முழுவதும் டிஜிட்டல்மயமாகிறது காரக்பூர் ஐஐடி கல்வி நிறுவனம்...!!

Posted By:

காரக்பூர்: காரக்பூர் நகரில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனம் முழுவதும் டிஜிட்டல்மயமாகிறது.

இதற்கான ஒப்புதலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நேஷனல் டிஜிட்டல் நூலகம் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வித் தேவைக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் இது தொடங்கப்பட்டது. 2014-ல் இது ஐஐடிகாரக்பூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

முழுவதும் டிஜிட்டல்மயமாகிறது காரக்பூர் ஐஐடி கல்வி நிறுவனம்...!!

இந்த நூலகம் மூலம் ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம் முழுவதும் டிஜிட்டல்மயமாகவுள்ளது. இந்தத் திட்டத்தை பேராசிரியர் தாஸிடம் ஒப்படைத்துள்ளது மத்திய அமைச்சகம். இவர் ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்தவர். சர்வதேட டிஜிட்டல் நூலகத்தைப் போன்ற தேசிய டிஜிட்டல் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி-யில் படிக்கும் எந்த ஒருவர் மாணவரும் இந்த டிஜிட்டல் நூலகத்தை இலவசமாக அணுகி பயன் பெற முடியும். மேலும் நாட்டின் எந்தவொரு ஐஐடி-யிலிருந்தும் மாணவர்கள் இதை அணுக முடியும்.

English summary
The National Digital Library that was initiated by the Ministry of HRD to create a national online educational asset for students interested in innovation and research, was handed over to IIT-Kharagpur to initiate, conceptualise and execute, in 2014.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia