ஐஐடி கான்பூரில் பிஎச்.டி. சேர்க்கை ஆரம்பம்!

Posted By:

சென்னை: கான்பூரிலுள்ள ஐஐடி-யில் பிஎச்.டி., எம்.எஸ்.படிப்புக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று கான்பூரிலுள்ள ஐஐடியாகும்.

இந்த ஐஐடி-யில் பிஎச்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளன.

ஐஐடி கான்பூரில் பிஎச்.டி. சேர்க்கை ஆரம்பம்!

இந்த படிப்புகளில் சேர பி.டெக், பி.எஸ். படிப்புகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். படிப்பின் கடைசி ஆண்டில் இருப்பவர்களும் இந்த படிப்பில் சேர முடியும்.

படிப்பில் சேர விரும்புவோர் கான்பூர் ஐஐடி இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.400 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கட்டணம் ரூ.200 ஆகும்.

விண்ணப்பக் கட்டணத்தை 'The Registrar, IIT Kanpur என்ற பெயரில் கேட்புக் காசோலையாக கான்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/doaaold/DOAA/admission2015_21.htm என்ற லிங்கைைக் கிளிக் செய்து அறியலாம்.

English summary
Indian Institute of Technology (IIT), Kanpur has invited applications for admission to second semester Doctor of Philosophy (Ph.D) in Engineering, Sciences and Humanities & Social Sciences and Master of Science (MS) by research programmes commencing from December 26, 2015. Eligibility Criteria: B.Tech/BS students from CFTIs (Centrally Funded Technical Institutes) having CPI of 7.5 or more and M.Sc. students from CFTIs having CPI of 7.0 or more are eligible to get admission and financial assistance in Ph.D programme without GATE score Students who are in final year of their programme (likely to finish the program by July 15, 2016) can also apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia