ஏரோபீலியா போட்டியில் முதல் பரிசு வென்ற கான்பூர் ஐஐடி மாணவர்கள்...!!

Posted By:

கான்பூர்: ஏரோபீலியா 2016 எனப்படும் விமானப் பொறியியல் தொடர்பான போட்டியில் கான்பூர் ஐஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசு வென்றுள்ளனர்.

ஐஐடி, விமானப் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், விமானப் படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்ளுக்காக இந்தப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரிலுள்ள சஹாயாத்ரி பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் கான்பூர் ஐஐடி மாணவர்கள் கார்த்திக், தீபக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறைஅமைச்சர் கிம்மனே ரத்னாகர் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

ஏரோபீலியா போட்டியில் முதல் பரிசு வென்ற கான்பூர் ஐஐடி மாணவர்கள்...!!

2-வது பரிசை பூனாவிலுள்ள ஏஐஎஸ்எஸ்எம்எஸ் கல்லூரி மாணவர் வைபவ் வென்றார். 3-வது பரிசு அட்டாவரிலுளள மணிப்பால் பள்ளி மாணவர் விஷானுக்குக் கிடைத்தது.

ஆறுதல் பரிசாக சூரத்கல் என்ஐடி மாணவர்கள் ஆகிப், சரம், மௌசின், விஸ்வாஸ் ஆகியோருக்கும், மங்களூரு மௌண்ட் கார்மேல் பள்ளி மாணவர் ஓம்கார் வி. ராவ் ஆகியோருக்கும் கிடைத்தது.

English summary
Mangaluru: IIT Kanpur, NIT-Karnataka, Surathkal, AISSMS College of Engineering, Pune Delhi Public School, Mangaluru and Mount Carmel High School, Mangaluru, were shortlisted during the second round of the flying competition at Aerophilia 2016, held at Sahyadri College of Engineering and Management. The winners were selected on the basis of flight scene formula.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia