ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களைப் படிக்கணுமா... காரக்பூர் பல்கலை, கர்ட்டின் பல்கலை. ஒப்பந்தம்...

Posted By:

டெல்லி: ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களை மாணவர்கள் படிக்கும் திட்டத்துக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி காரக்பூர் (ஐஐடி-கே), கர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கர்ட்டின் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும் மாணவர்கள், அதே நேரத்தில் ஐஐடி-கே-வில் நிதியுதவியுடன் மற்றொரு டாக்டர் பட்டத்தையும் படிக்கலாம். இந்த இரட்டை டிகிரி திட்டத்துக்குத்தான் ஒப்பந்தங்களை இரு கல்வி நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பல்கலைக்கழகத்தில் ஒராண்டு தங்கி படிக்க முடியும்.

ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களைப் படிக்கணுமா... காரக்பூர் பல்கலை, கர்ட்டின் பல்கலை. ஒப்பந்தம்...

இதில் வெளிநாடு செல்வதற்குரிய செலவுகள், ஒப்பந்தங்கள், விசா போன்றவையும் அடங்கும்.

இதேபோல கர்ட்டின் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஓராண்டு ஐஐடி-கேவில் தங்கிப் படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Institute of Technology, Kharagpur (IIT-K) has signed an MoU with Curtin University, Australia in an effort to enable students to pursue dual doctoral degree programme (DDDP). According to the MoU, students who are pursuing doctoral degree at IIT-Kharagpur are also eligible to apply for DDDP only if they meet the academic requirements of both IIT Kharagpur and Curtin University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia