ஐஐடி-யில் எம்எஎஸ்சி சேர ஜேம் தேர்வு... 2016 பிப்ரவரியில் நடக்கிறது!

Posted By:

சென்னை: ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் இணைய விருப்பமுள்ள மாணவர்கள் ஜேம் தேர்வை எழுத வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்த "ஜேம்' 2016 ஒருங்கிணைந்த சேர்க்கை தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடி-யில் எம்எஎஸ்சி சேர  ஜேம் தேர்வு... 2016 பிப்ரவரியில் நடக்கிறது!

இந்திய அறிவியல் நிறுவனத்தில்(ஐஐஎஸ்சி) வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர ஜேம் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த "ஜேம்' தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்கின்றன. எனவே இந்தப் படிப்புகளைப் பயில விரும்பும் மாணவர்கள் ஜேம் தேர்வுக்குத் தயாராவது அவசியமாகிறது.

2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வை சென்னை ஐஐடி நடத்தவுள்ளது. 2016 பிப்ரவரி 7 ஆம் தேதி ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க அக்டோபர் 14-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://jam.iitm.ac.in/jam2016/ என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Institutes of Technology (IIT), Madras has announced the exam dates for Joint Admission Test for M.Sc (JAM-2016), which will be conducted in February 2016. The JAM online exam will be held on Sunday, February 07, 2016. Indian Institute of Technology Joint Admission Test - IIT JAM 2016 invites applications from eligible candidates for admission to M.Sc (Two Years), Joint M.Sc - Ph.D, M.Sc - Ph.D Dual Degree, M.Sc - M.Tech. M.Sc - M.S (Research) / Ph.D Dual Degree and Other Post - Bachelor's Degree Programs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia