ஏப்ரல் 9, 10-ல் ஐஐடி ஜேஇஇ பிரதானத் தேர்வு!!

Posted By:

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐடி ஜேஇஇ பிரதானத் தேர்வு ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நடத்தவுள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏப்ரல் 9, 10-ல்  ஐஐடி ஜேஇஇ பிரதானத் தேர்வு!!

இந்த ஐஐடி ஜேஇஇ பிராதன நுழைவுத் தேர்வு ஆன்-லைன் தேர்வாக நடைபெறும். இதற்கான ஆப்-லைன் தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர்.

இதைத் தொடர்ந்து இப்போது ஆன்-லைன் தேர்வு நடைபெறவுள்ளது. ஜேஇஇ பிரதானத் தேர்வை கடந்த ஆண்டு 13.04 லட்சம் பேர் எழுதினர். ஆனால் இந்த ஆண்டு இது 12.07 லட்சமாகக் குறைந்துவிட்டது.

இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் நாடு முழுவதிலும் அமைந்துள்ள ஐஐடி, என்ஐடி உயர்கல்வி நிறுவனங்களில் உயர் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கடந்த ஆண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் வெற்றி பெறறனர். இந்த ஆண்டும் அதைப் போன்றே மாணவர்கள் தேர்வு இருக்கும். இதற்காக இணை சேர்க்கை ஒதுக்கீடு ஆணையம் (ஜேஓஎஸ்ஏஏ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் மாணவர் சேர்க்கையை கையாளும்.

English summary
Nearly 3 lakh students are gearing up to take up IIT JEE Main 2016 entrance exam on April 9 and April 10, 2016. The exam will be held online through computer based mode. The offline examination of the same was held on April 3, 2016. About 10 lakh student took up the offline examinations on April 3, 2016. The number of students registered for JEE Main 2016 has seen a significant decrease from last year's 13.04 lakh, to this year's 12.07 lakh students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia