இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்கலாம்...வாங்க....!!!

Posted By:

சென்னை: இந்தூரிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் முக்கிய இடங்களைப் பிடித்திருப்பதில் இந்தூர் ஐஐடி-யும் ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது பிஎச்.டி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த படிப்பு 2016-ம் ஆண்டில் தொடங்கும்.

என்ஜினீயரிங், பயோசயின்ஸஸ் அண்ட் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகள் பயிலலாம்.

இந்த படிப்பில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், பயோமெடிக்கல், கெமிக்கல், பயோ டெக்னாலஜி, சிக்னல் பிராஸஸிங், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றிருக்கவேண்டும்.

இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்கலாம்...வாங்க....!!!

மேலும் கேட் தேர்விலும் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர விரும்புவோர் ஐஐடி இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பித்தல் வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வங்கி சலான், புகைப்படம், சுய கையொப்பமிட்ட சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அப்ளிகேஷனை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iiti.ac.in என்ற இந்தூர் ஐஐடி-யின் இணையதளத்தை அணுகலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia