ஹைதராபாத் ஐஐடி-யில் பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு

Posted By:

சென்னை: ஹைதராபாத் ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனம், உயர் கல்வி நிறுவனங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிறுவனமாகும். இந்தக் கல்வி நிறுவனத்தில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், பயோ-டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், டிசைன், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், கணிதம் ஆகிய பிரிவுகளில் பிஎச்.டி படிக்கலாம்.

ஹைதராபாத் ஐஐடி-யில் பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு

இந்த படிப்பு படிக்க விரும்புபவர்கள் அறிவியல், என்ஜினீயரிங், டெக்னாலஜி படிப்புகளில் மாஸ்டர் டிகிரி படித்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் 60 சதவீத மதிப்பெண்களையும் அவர்கள் பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

டிகிரி முடித்திருப்பவர் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். அப்போது மட்டுமே இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த படிப்பு 2016-ம் கல்வியாண்டில் தொடங்கும். மேலும் விவரங்களுக்கு

http://www.iith.ac.in/phdadmissions/brochure.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

English summary
Indian Institute of Technology (IIT), Hyderabad has invited applications for admission to Doctor in Philosophy (Ph.D) programme in Bio Medical Engineering, Bio Technology, Chemistry, Civil Engineering, Computer Science and Engineering, Design, Electrical Engineering and Mathematics. Admissions are offered for the session January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia