கௌஹாத்தி ஐஐடி-யில் உதவித்தொகையுடன் பிஎச்.டி படிக்க அற்புதமான வாய்ப்பு

Posted By:

சென்னை: அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியிலுள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பிஎச்.டி படிப்பு பயில அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கௌஹாத்தி ஐஐடி-யில் பிஎச்.டி. படிப்புக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. டிசம்பரில் இந்த படிப்பு தொடங்கவுள்ளது.

கௌஹாத்தி ஐஐடி-யில் உதவித்தொகையுடன் பிஎச்.டி படிக்க அற்புதமான வாய்ப்பு

இந்த படிப்பு பயில்வோருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அதாவது இளநிலை ஆராய்ச்சி உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மாதம்தோறும் வழங்கப்படும். முதுநிலை ஆராய்ச்சி படிப்போருக்கும் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த படிப்பு பயில விரும்புவோர் பி.இ அல்லது பி.டெக்கில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் கேட் தேர்விலும் தேர்ச்சியைப் பெற்றிருக்கவேண்டும்.

படிப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசி தேதியாகும்.

உதவித்தொகை தொடர்பான தகவல்களைப் பெற http://www.iitg.ernet.in/acad/PhDAdvtNotificationDec2015/Brochure.htm#FinancialSupport என்ற லிங்க்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Institute of Technology (IIT), Guwahati for has invited applications for Ph.D Scholarships for students pursuing their Doctor of Philosophy (Ph.D) programme. Scholarship is offered in various departments for the session December 2015-16. Scholarship Details: Junior Research Fellow(JRF): Rs.25,000/- p.m. Senior Research Fellow(SRF) : Rs.25,000/- p.m.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia