மாணவர்கள் நாசா செல்ல அருமையான வாய்ப்பு: கௌஹாத்தி ஐஐடி நடத்துகிறது...!!

Posted By:

டெல்லி: பள்ளி மாணவர்கள் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செல்வதற்கான போட்டியை கௌஹாத்தியிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு இந்த சுற்றுப்பயணம் அமையவுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த ஆராய்ச்சி மையத்துக்கு சுற்றுலா சென்று வருவர்.

மாணவர்கள் நாசா செல்ல அருமையான வாய்ப்பு: கௌஹாத்தி ஐஐடி நடத்துகிறது...!!

ஆண்டு தொழில் நிர்வாக திருவிழா என்ற பெயரில் இந்த சர்வதேச பள்ளி சாம்பியன்ஷிபர் போட்டியை ஐஐடி நடத்துகிறது.

மாணவர்களின் அறிவு வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு இந்த அறிவியல் தொழில்நுட்ப போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதன்மைத் தேர்வுகள் அதைத் தொடர்ந்து பிரதான தேர்வு என 2 கட்டமாக போட்டி நடைபெறவுள்ளது.

முதன்மைப் போட்டிகள் நாடு முழுவதும் உள்ள 350 மையங்களில் நடைபெறும். அதில் தேர்வாகும் 50 அணிகள் இறுதி கட்டப் போட்டியாக கௌஹாத்தி ஐஐடி வளாகத்தில் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாசா அழைத்துச் செல்லப்படுவர்.

English summary
IIT-Guwahati will conduct a tour to NASA's Ames Research Centre in California in USA for the champions of Technothlon - the International School Championship - to be held in the institute as a part of its Annual Techno-Management Festival, Techniche, this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia