டெல்லி: நாடெங்கிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத்தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
ஐஐடி-களில் கட்டண உயர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐஐடி கவுன்சில் நிலைக் குழு முடிவு செய்தது. அதாவது மும்மடங்கு கட்டண உயர்வு வரும் கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. இதற்கு மாணவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் எஸ்டி, எஸ்சி மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று இரானி அறிவித்துள்ளார். அதைப் போலவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கட்டணம் முழுதும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் பிற்படுத்தப்பட்ட, மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்பத்தில் ஆண்டு வருமான ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால் அவர்களது கட்டணம் 66 சதவீதம் வரையில் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அவர். சமீபத்தில் ஐஐடி கட்டணம் ஆண்டுக்கு ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications

