மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி: ஐஐடி கட்டண உயர்வு இந்த ஆண்டு முதலே அமல்!!

Posted By:

டெல்லி: ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் கட்டண உயர்வு இந்த ஆண்டு முதல் அமைந்துள்ளது. ஐஐடி-யில் பயில விரும்பும் மாணவர்களுக்கு பேரிடிச் செய்தியாக இது அமைந்துள்ளது.

ஐஐடி-களில் கட்டண உயர்வு தொடர்பாக பரிசீலிக்க தனிக் குழுவை மத்திய மனித வள அமைச்சகம் அமைத்திருந்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியது.

மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி: ஐஐடி கட்டண உயர்வு இந்த ஆண்டு முதலே அமல்!!

இதைத் தொடர்ந்து தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ளது பயிற்றுக் கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த மாணவர்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு 2016-17-ம் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது மத்திய மனித வள அமைச்சகம்.

ஆனால் ஏற்கெனவே ஐஐடி-களில் இணைந்து படித்து வரும் மாணவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டணத்தையே செலுத்தி படிக்கலாம். ஆனால் 2016-17-ம் ஆண்டில் புதிதாகச் சேரும் மாணவர்கள் புதிய கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று மத்திய மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
The IIT fee hike announced recently will be applicable from admissions that take place from academic year 2016-17 onwards, the HRD ministry said. In a statement issued here, the ministry said that "the revised fee would be applicable for students taking admission starting from academic year 2016-17 onwards. The students currently studying would continue to pay at the existing rates." The government had recently decided to increase the annual fees for undergraduate courses from existing Rs 90,000 to Rs 2 lakh, a rise of 122 per cent, from the upcoming academic session.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia