ஜூலை முதல் செயல்படத் தொடங்குகிறது தார்வாட் ஐஐடி...!!

Posted By:

பெங்களூரு: ஜூலை மாதம் முதல் தார்வாட் நகரில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனம் செயல்படவுள்ளது.

தொடக்கத்தில் இங்கு 3 படிப்புகள் இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளுடன் ஐஐடி செயல்படத் தொடங்கும்.

ஜூலை முதல் செயல்படத் தொடங்குகிறது தார்வாட் ஐஐடி...!!

தற்போது ஐஐடி-க்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதுவரை இந்த ஐஐடி வாட்டர் அண்ட் லேண்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் (டபிள்யூஏஎல்எம்ஐ) வளாகத்தில் செயல்படும்.

புதிய ஐஐடிக்காக 3 ஆய்வகங்களைத் தர தார்வாட் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தார்வாட் ஐஐடி-க்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு பம்பாய் ஐஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக பம்பாய் ஐஐடி-யிலிருந்து 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சிவப்பிரசாத் தலைமையிலான குழு இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளது. இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழனும் இடம்பெற்றுள்ளார்.

English summary
The Indian Institute of Technology (IIT) Dharwad, will begin its academic functions from the month of July. There are plans of introducing three new courses - Computer Science, Mechanical and Electronics initially. According to the Indian Express, the academic activities will commence on the transit campus at the Water and Land Management Institute (WALMI), till permanent infrastructure is constructed.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia