வழிகாட்டும் இளம் ஐஎப்எஸ்.!வழிகாட்டும் இளம் ஐஎப்எஸ்.!

ஐஎப்எஸ் அதிகாரியாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் இளம் ஐஎப்எஸ் அதிகாரியான அனுபம் சர்மா. தான் இந்திய வனத்துறை அதிகாரியாக (ஐஎப்எஸ்) உயர நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தனது பெற்றோர் செய்த தியாகம்தான் முக்கியக் காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா கூறி வருகிறார். அவரது பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அனுபம் சர்மா, இளம்வயதிலேயே குடிமைப்பணி தேர்வு எழுதி உயர் அதிகாரியாக வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டுள்ளார். இதற்காக அவரது பெற்றோர் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தங்களது குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

தான் குடிமைப்பணி அதிகாரியாக உயர தனது பெற்றோர் செய்த தியாகம் குறித்து இந்திய வனத்துறை அதிகாரி அனுபம் சர்மா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அனுபம் சர்மா தன் வீட்டிலுள்ள பழைய குளுகுளு இயந்திரத்தின் போட்டோவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:

வழிகாட்டும் இளம் ஐஎப்எஸ்.!

நான் அதிகாரியாக ஆசைப்பட்டது எனது பெற்றோர்தான். அவர்களது கனவுகளை நான் நனவாக்கினேன். எனது பெற்றோர் இதுவரை வாங்கிய ஒரு ஒரே ஏசி மெஷின் இதுதான். 10 வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டில் இதை வாங்கினர்.

சுட்டெரிக்கும் கோடைக்காலத்தின் வெட்கையில் நான் சிரமப்படாமல் நான் சவுகரியமாகப் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்பதற்காக எனது படுக்கையறையில் இந்த குளுகுளு மெஷினைப் பொருத்தினர்.

தங்களது குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக ஒரு நடுத்தர வர்க்க பெற்றோர் அன்று எடுத்த இந்த முயற்சியை இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர்களது தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது.

இவ்வாறு அனுபம் சர்மா அதில் கூறியிருந்தார்.
அனுபம் சர்மாவின் இந்த பதிவை பாராட்டி சமூக ஊடகத்தில் நெட்டிசன்கள் பலர் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகள், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். டெல்லி ஐஐ-டியில் பட்டம் பெற்றவர் அனுபம் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் குடிமைப் பணி தேர்வெழுதி ஐஎப்எஸ் அதிகாரியாக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தன்னைப் போன்ற ஏழை மாணவர்கள் பலரும் குடிமைப் பணி தேர்வெழுத வேண்டும் என்ற அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். ஏழை மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் அவர் இருந்து வருகிறார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IFS officer Anupam Sharma took X to share about his family's heartening efforts while he was preparing for competitive exams. After he shared the tweet, it took the microblogging platform by storm. Many people were left emotional after seeing the post. "This is the only AC my parents had ever purchased, ~10 years back in 2014. It was installed in my room so that I can prepare for competitive exams with greater comfort & focus in summer. Just a glimpse of efforts put in by middle-class parents for their children's future," wrote Sharma in the post. Alongside, he also posted a picture of the AC.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+