டெல்லி ஐஐடி-யில் எம்பிஏ படிக்க ஆசையா இருக்கா....!!

Posted By:

சென்னை: டெல்லி ஐஐடி-யில் எம்பிஏ படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்த எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள் (மாலை நேர வகுப்புகள்) 2016-ம் ஆண்டுக்கானது ஆகும்.

இந்த படிப்பு படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியல், கணிதம், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்.

டெல்லி ஐஐடி-யில் எம்பிஏ படிக்க ஆசையா இருக்கா....!!

மேலும் 2 ஆண்டு வேலை பார்த்த அனுபவமும் இருக்கவேண்டும்.

தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்த படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர்.

விருப்பமுள்ள மாணவர்கள் ஐஐடி டெல்லி இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். பின்னர் அந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து 'The Chairman, GATE-JAM, Indian Institute of Technology, Delhi, Hauz Khas, New Delhi- 110016' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பத்துடன் ரூ.2,500-க்கு கேட்புக் காசோலையை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி மார்ச் 18 ஆகும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும். குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஏப்ரல் 23, 24-ம் தேதிகளில் நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு www.iitd.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The Indian Institute of Technology (IIT Delhi) has invited applications from interested and eligible candidates to apply for its Executive MBA (evening programme) for working executives. The duration of the programme will be of three years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia