ஐஐடியில் முதல்கட்ட சேர்க்கை முடிந்துள்ளது, மாணவர்கள் மும்மை மற்றும் டெல்லி ஐஐடிகளுக்கு முன்னுரிமை

Posted By:

ஐஐடி முதல்கட்ட சேர்க்கை முடிவில் ஐஐடி சேர்க்கையில் மாணவர்கள் டில்லி ஐஐடி, மும்பை ஐஐடிகளுக்கு முன்னுரிமை அளிப்பது தெரியவந்துள்ளது . முதல் நூறு ரேங்குகள் பெற்றவர்கள் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்கிறார்கள் .
ஜேஇஇ நுழைவு தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள என்.ஐ.டி, ஐஐடி, ஐஐஐடிகளில் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த ஜே.ஒ.எஸ்.ஏ.ஏ ஆணையம் சேர்க்கை நடத்துக்கின்றது. நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். 97 கல்வி நிறுவனங்கள் கொண்ட அமைப்பில் , 36114 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். 11000 பேர் ஐஐடி இடத்தேர்வு, 18000 பேர் என்ஐடி, மற்றும் 3000 பேர் ஐஐஐடி , 4000 பேர் மற்ற பிரிவினை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜேஇஇ நுழைவு தேர்வில் முதல் நூறு இடம் பெற்றவர்களுக்கான முதல் கட்ட இடத்தேர்வு முடிந்துள்ளது


பொது பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் முதல் 100 ரேங்குகளையும் , 46 பேர் மும்பை ஐஐடிகளையும், 32 பேர் தில்லி ஐஐடிகளையும் 4 பேர் சென்னை மீதமுள்ளவர்கள் மற்ற ஐஐடிகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிடெக் கணினி அறிவியலையே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் . நாட்டில் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களாக ஐஐடி , என்.ஐ.டிக்கள் உள்ளன அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியுடன் வசதியான தங்குமிடம் அனைத்தும் அமைத்து தரப்படும் . இவற்றில் படித்த மாணவர்கள் உள்நாடு மற்றும்  வெளிநாடுகளில் சிறந்த வேலைவாய்ப்பில் பெருமை சேர்ப்பவர்களாவார்கள் . 

சார்ந்த தகவலகள் : 

ஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்கு கவுன்சிலிங்: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு...!!

 

English summary
above article tell about iit, nit counselling admission preference

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia