உங்களுக்கு இ-நோஸ் தெரியுமா...!!

Posted By:

மும்பை: வெடிபொருட்கள், பயங்கரவாதப் பொருட்களைக் கண்டறிய உதவும் இ-நோஸ் என்ற கருவியை கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர் ஐஐடி பம்பாய் மாணவர்கள்.

வெடிபொருட்கள், வெடிகுண்டுகளைக் கண்டறிய தற்போது மோப்ப நாய்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பம்பாய் ஐஐடி மாணவர்கள் இந்தப் பொருட்களைக் கண்டறிய உதவும் கையடக்கமான எலக்ட்ரானிக் நோஸ் எனப்படும் இ-நோஸ்-ஐக் கண்டறிந்துள்ளனர்.

உங்களுக்கு இ-நோஸ் தெரியுமா...!!

இதன்மூலம் வெடிபொருட்களை எளிதில் கண்டறிந்துவிட முடியும். நேனோ தொழில்நுட்பத்துடன் உதவியுடன் இந்த இ-நோஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஐஐடி-யைச் சேர்ந்த 15 மாணவர்கள், 5 பேராசிரியர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுலகக நிதியுதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இ-நோஸ் கருவியை ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன்ற கருவிகளில் இதை இணைந்து தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கமுடியும்.

இதுகுறித்து ஐஐடி பம்பாய் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ் பேசியதாவது: ஆர்டிஎஸ், இஎன்டி போன்ற வெடிப்பொருட்களை இந்தக் கருவி எளிதில் கண்டறிந்துவிடும். இது சிறப்பாக செயல்பட்டு அனைத்துவிதமான வெடிபொருட்களையும் கண்டறியும். மனித மூக்கு அல்லது நாய்களின் மூக்கு போலவே இது செயல்பட்டு மோப்பம் பிடிக்கும் என்றார் அவர்.

English summary
deploying sniffer dogs to scour crowded buses and trains or a packed stadium for explosives first requires cordoning off the area which isn't a mean task. But now there's an easy way out, thanks to the Indian Institute of Technology (IIT) Bombay, which has come up with a nano technology-based portable electronic nose, popularly known as eNose, to sniff out explosives from the most congested of places.Developed by a team of 15 students and five faculty members from four different departments of IIT Bombay and funded by the office of the principal scientific adviser, government of India, the eNose will be eventually integrated into mobile phones in order to be monitored remotely .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia