ஒடிஸி நடனத்தை பி.டெக் பாடமாக அறிமுகம் செய்யும் புவனேஸ்வர் ஐஐடி!

Posted By:

சென்னை: நாட்டில் மிகவும் பிரபலமான ஒடிஸி நடனத்தை பி.டெக் பிரிவில் பாடமாக அறிமுகம் செய்துள்ளது புவனேஸ்வர் ஐஐடி.

இதுதொடர்பாக புவனேஸ்வர் ஐஐடி இயக்குநரர் ஆர்.வி. ராஜக்குமார் தெரிவித்ததாவது:

நாட்டிலேயே மிகவும் பிரபலமான நடனமாக இருப்பது ஒடிஸி நடனம். இப்போது இந்த நடனத்தை பி.டெக் பிரிவில் ஒரு பாடமாக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி கல்வி நிறுவனத்தில் பி.டெக் கல்விப் பாடத்தில் ஒடிஸி நடனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த படிப்பில் முதலாம் ஆண்டில் வாரத்துக்கு 5 மணி நேரம் ஒடிஸி கற்றுத் தரப்படும். ஒடிஸி பாடத்தை பி.டெக்கில் அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் 10 பெண்கள் இந்த படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.

2, 3-ம் ஆண்டுகளில் ஒடிஸிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். 4-ம் ஆண்டுகளில் விருப்பப் பாடமாக ஒடிஸி வைக்கப்படும்.

ஒடிஸி நடனம் மூலம் மாணவர்களின் கல்வி அறிவுத் திறன் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

English summary
The famous dance form Odissi has been introduced by IIT Bhubaneswar as a BTech subject, which is a first of its kind in the country. It becomes the first IIT in the entire country to introduce any dance form in its curriculum said director RV Rajakumar.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia