டிஜிட்டல்மயமாகிறது பெங்களூரு ஐஐஎஸ்சி நூலகம்!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) நூலகம் விரைவில் டிஜிட்டல்மயமாகிறது.

இதற்கான பணிகளை தற்போது ஐஐஎஸ்சி தொடங்கியது.

டிஜிட்டல்மயமாகிறது பெங்களூரு ஐஐஎஸ்சி நூலகம்!!

நூலகத்திலுள்ள புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த நூலகம் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,500 புத்தகங்களும், 10 ஆயிரம் இதழ்களும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. 5,500 டைட்டில்கள் வரை ஆன்-லைனில் தற்போது பார்க்க முடியும்.

மேலும் 2,500 இ-இதழ்களையும் டிஜிட்டல் வடிவில் காணமுடியும். இந்த நூலகத்தில் 8 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகளும், 2 லட்சத்துக்கும் அதிகமாகமான புத்தகங்களும் இங்கு உள்ளன. புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியை வெளிப்பணிக்கு(அவுட்சோர்சிங்) கொடுத்திருப்பதாக ஐஐஎஸ்சி துணை நூலகர் புட்டபசவய்யா தெரிவித்தார்.

English summary
The Indian Institute of Science (IISc) has been digitising lakhs of books and thousands of doctoral theses at its library Books are being digitised under the Digital Library of India programme, which provides for digitisation of freely accessible rare books collected from various libraries in India. The premier institute is also giving importance to digitisation of doctoral theses and journals. The process of digitisation began six years ago. So far, the IISc has digitised 2,500 books and as many theses. Now, 10,000 bound volume journals and more than 5,500 titles are available online. The library subscribes to 2,500 e-journals. Since 2009, all journals are being subscribed online, except for some Indian journals.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia