உலக டாப்-100 கல்வி நிறுவனப் பட்டியலில் இடம்பிடித்த பெங்களூரு ஐஐஎஸ்சி!!

Posted By:

சென்னை: உலக டாப்-100 கல்வி நிறுவனத் தர வரிசைப் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(ஐஐஎஸ்சி) இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் டைமஸ் உயர்கல்வி இதழ் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில்தான் முதல் 100 இடங்களில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஐஐஎஸ்சி தவிர இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

பட்டியலில் இக்கல்வி நிறுவனமானது 99-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட், கால்டெக், மஸாச்சுஸட்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன. டைம்ஸ் உயர்கல்வி இதழ் இதுவரை வெளியிட்ட தரவரிசைப் பட்டியல்களில் இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

English summary
India features in the top 100 of the Times Higher Education's (THE) world university rankings for the first time. Indian Institute of Science, Bangalore hold the 99th position in list of the elite universities for engineering and technology. The THE released the latest rankings of the world's top 100 universities in the field of engineering and technology on Wednesday revealing a strong year across Asia. The top 10 of the THE World University rankings are dominated by institutions of US. Top 3 positions were bagged by Stanford University, California Institute of Technology and Massachusetts Institute of Technology respectively.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia