வளாகத் தேர்வில் விசாகப்பட்டினம் ஐஐஎம் மாணவர்களுக்கு வேலை!!

Posted By:

சென்னை: விசாகப்பட்டினத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் (ஐஐஎம்-வி) படித்த அனைத்து மாணவர்களுக்கும் வளாகத் தேர்வில் வேலை கிடைத்துள்ளது.

நாட்டில் நிர்வாகவியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால்தான் கடந்த ஆண்டில் 6 புதிய ஐஐஎம்-கள் தொடங்கப்பட்டன. இதில் விசாகப்பட்டினம் ஐஐஎம்-மும் ஒன்று. இந்த ஐஐஎம்-ல் நடப்பாண்டில் படிப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து அதற்கான பணியாணையையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

வளாகத் தேர்வில் விசாகப்பட்டினம் ஐஐஎம் மாணவர்களுக்கு வேலை!!

மொத்தம் 48 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. 33 நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

இந்த வளாகத் தேர்வை பெங்களூர் ஐஐஎம்-மும், விசாகப்பட்டினம் ஐஐஎம்-மும் இணைந்து நடத்தின.

இத்தகவலை ஐஐஎம் பெங்களூரு கேரியர் டெவலப்பமெண்ட் சர்வீஸஸ் தலைவர் கணேஷ்பிரபு தெரிவித்தார்.

கேபிஎம்ஜி, எர்னஸ்ட் அண்ட் யங்க, ஜியோமி, டைரக்டி, மைண்ட்ரீ, கேப்ஜெமினி, சுதர்லேண்ட் குளோபல், மெபாஸிஸ், ஹாப்ஸ்காட்ச், மௌஜ் டாட் காம், ரிலையன்ஸ் ஏடிஏஜி, ஜிந்தால், எச்பிசிஎல் போன்ற நிறுவனங்கள் இந்த வளாகத் தேர்வில் பங்கேற்றன.

English summary
The entire first batch of the Indian Institute of Management Visakhapatnam, except for one student, has been offered jobs at the summer placement season held recently. The institute said 48 of the 49 students of the 2015-17 class who participated in the summer placement have secured jobs from 33 companies. One student opted out to pursue a startup. IIM Visakhapatnam (IIM-V) is among the six new IIMs launched last year. It is currently operating under the faculty mentorship of IIM Bangalore (IIM-B). The summer placement was organised jointly by IIM Visakhapatnam and IIM Bangalore.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia