திருச்சி ஐஐஎம்-மில் இயக்குநர் பதவி காலியாக இருக்கு!!

Posted By:

சென்னை: திருச்சியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில்(ஐஐஎம்) இயக்குநர் பணியிடம் காலியாக இருக்கிறது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப்பணியிடத்துக்கு மார்ச் 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

திருச்சி ஐஐஎம்-மில் இயக்குநர் பதவி காலியாக இருக்கு!!

மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு பிஎச்.டி முடித்திருக்கவேண்டும். மேலும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளை முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கவேண்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் பேராசிரியர் அனுபவம் இருக்கவேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள்பணி, 5 ஆண்டுகள் நிர்வாகப்பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் இந்த விண்ணப்பங்களை மார்ச் 4-ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பவேண்டும். இதுதொடர்பான முடிவுகள் திருச்சி ஐஐஎம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

திருச்சி ஐஐஎம் இன்ஸ்டிடியூட் 2011-ல் உருவாக்கப்ப்டடது. மத்திய அரசால் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிர்வகிக்கப்பட்ட 7 ஐஐஎம்-களில் இதுவும் ஒன்று. பெங்களூரு ஐஐஎம் இன்ஸ்டிடியூட்டால் இது கண்காணிக்கப்படுகிறது.

English summary
Indian Institute of Management Tiruchirappalli invited applications for the post of Director. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 04 March 2016. IIM Tiruchirappalli Vacancy Details Total Number of Posts: 01 Name of the Post: Director Eligibility Criteria for Director Post Educational Qualification: Ph.D Degree from a reputed Institution with First Class degree either at Bachelor's and Master's levels. At least 15 years teaching / research experience, They should have been a full Professor at a reputed Institution for at least 7 years and have as well at least 5 years of experience in administrative areas.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia