ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுடன் லக்னோ ஐஐஎம் ஒப்பந்தம்

Posted By:

சென்னை: ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுடன் லக்னோ ஐஐஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக லக்னோவைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் சமீபத்தில் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் நடைபெற்ற பேராசிரியர் பயிலரங்கில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுடன் லக்னோ ஐஐஎம் ஒப்பந்தம்

இந்த நிலையில் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுடன் இணைந்து புதிய படிப்பையும் ஐஐஎம் லக்னோ தொடங்கவுள்ளது.

இது 2016-17-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மைக்ரோஎகனாமிக்ஸ் ஆஃப் காம்ப்படிடிவ்னெஸ் என்ற இந்தப் படிப்பை பேராசிரியர்கள் அஷுதோஷ்குமார் சின்ஹா, சஞ்சய் சிங் ஆகியோர் கற்றுத் தருவர். தற்போது இந்த கல்வி மும்பை எஸ்பிஐ ஜெயின் இன்ஸ்டிடியூட்டில் கற்றுத் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia