தொழிலக மையம் அமைத்தது இந்தூர் ஐஐஎம்!!

Posted By:

இந்தூர்: தொழிலக உதவி மையத்தை (ஐஐசி) இந்தூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்) அமைத்துள்ளது.

தொழில்துறைக்கு ஏற்படும் சவால்கள், பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்காக இந்த மையத்தை ஐஐஎம்-இந்தூர் அமைத்துள்ளது.

தொழிலக மையம் அமைத்தது இந்தூர் ஐஐஎம்!!

இதுகுறித்து தொழிலக உதவிக் குழுத் தலைவர் என்.எம்.பாட்டியா, கூறியதாவது: தொழில்துறைக்கு ஏற்படும் பிரச்னைகளை எளிதில் தீர்த்து வைப்பதற்காக இந்த குழுவை நாங்கள் அமைத்துள்ளது. சிறுதொழில் துறையினருக்கு உதவவும் இந்த மையம் பாடுபடும். தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கும், அரசுக்கும் இடையே இது பாலமாக இருக்கும்.

சிறுதொழில்துறையினருக்கு, உரிய ஆலோசனைகளையும் நாங்கள் வழங்குவோம். இதன்மூலம் ஐஐஎம் மாணவர்கள், உறுப்பினர்கள், நிபுணர்களுக்கும் இது உதவி வழங்கும்.ஐஐஎம்-மில் படித்து வெளியே வரும் மாணவர்கள், தொழில்தொடங்கும்போது அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் மையமாக இது செயல்படும் என்றார் அவர்.

English summary
Indian Institute of Management (IIM) Indore has set up an Industry Interface Cell (IIC) to enhance industry academia partnership and solve general and complex problems faced by the industry.The IIC is well equipped to handle all industry issues and will serve as a structured platform for interaction with the industry, feels the faculty.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia