ஆமதாபாத் ஐஐஎம்-ல் கட்டணம் உயர்வு...!! அதிர்ச்சியில் மாணவர்கள்....!!!

Posted By:

புதுடெல்லி: ஆமதாபாதில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்) உயர்கல்வி நிறுவனத்தில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆமதாபாத் ஐஐஎம்-ல் கட்டணம் உயர்வு...!! அதிர்ச்சியில் மாணவர்கள்....!!!

2 ஆண்டு பயிலக் கூடிய பி.ஜி. படிப்புகளுக்கு ரூ.1 லட்சம் அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. 2016-18-ல் முடியும் படிப்புகளுக்கு இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஐஐஎம் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஐஐஎம் இயக்குநர் ஆசிஷ் நந்தா கூறும்போது, ஐஐஎம் நிர்வாகச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்காண்டு பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அப்படியானால் வரும் ஆண்டுக்கு உயர்த்தப்படவுள்ள கட்டண உயர்வும் குறைவே. 2009-2011 கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த கட்டண உயர்வு குறைவுதான் என்றார் அவர்.

English summary
Indian Institute of Management- Ahmedabad (IIM-A) has announced 1 lakh increase in the fee for its flagship course, two-year Post-Graduate Programme in Management (PGPM). The fee has been hiked following the increasing competition among B-schools and change in the fee structure will be implemented from 2016-2018 batches. "The IIM-A Board has approved the increase of fees for its two-year PGPM. The amount is a cumulative fee for both years, including tuition, academic support, accommodation, basic health care, medical insurance, and alumni association membership fee," as per the reports.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia