கேரளா ஐஐஐடிஎம்-ல் எம்.எஸ்சி, எம்.பில் படிக்கப் போகலாமா...!!

Posted By:

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள ஐஐஐடிஎம் உயர்கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி, எம்.பில் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பில் படிப்பில் எக்காலஜிக்கல் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை படிக்க முடியும்.

கேரளா ஐஐஐடிஎம்-ல்  எம்.எஸ்சி, எம்.பில் படிக்கப் போகலாமா...!!

எம்.எஸ்சி படிப்பு படிக்க, பி.எஸ்சி படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

எம்.பில் படிப்பு படிக்க எம்.எஸ்சி, எம்சிஏ, எம்.டெக் படிப்பில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இந்தப் படிப்புக்காக ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பித்த பிறகு அதை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பவேண்டும். விண்ணப்பத்துக்கான கட்டணத்தை கேட்புக் காசோலையாக அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி விவரங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களுக்காக http://www.iiitmk.ac.in என்ற இணையதள முகவரியை அணுகலாம். மேலும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

http://www.iiitmk.ac.in/admission/Admission2016_helpline.html

English summary
Indian Institute of Information Technology and Management-Kerala (IIITM-K), Thiruvananthapuram has invited applications for admission to Master of Science (M.Sc) and M.Phil programmes for the academic year 2016. Master of Science (M.Sc) admissions are offered in Computer Science with specialisation in Cyber Security, Machine Intelligence, Data Analytics and Geospatial Data Analytics. Admissions to Master of Philosophy (M.Phil) are opened in Ecological Informatics and Computer Science programmes. Find more details, Indian Institute of Information Technology and Management-Kerala (IIITM-K)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia