காஞ்சிபுரம் ஐஐஐடி-டீஎம் இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி. பெலோஷிப் பணியில் சேரலாம்!

Posted By:

சென்னை: காஞ்சிபுரத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலலஜி டிசைன் அண்ட் மேனஃபேக்ச்சரிங் (ஐஐஐடி-டீஎம்) இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி. பெலோஷிங் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிங், கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பிஎச்.டி. படிப்பவர்கள் இந்த பெலோஷிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

2016-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்பைப் படிப்பவர்கள் இந்த ஃபெலோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த ஃபெலோஷிப் பெற விரும்புபவர்கள் பட்டமேல்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் நெட் அல்லது கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். அவர்களுக்கு இந்த ஃபெலோஷிப் கிடைக்கும். முதல் இரண்டுகளுக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.

இந்த ஃபெலோஷிப் பெற விரும்புபவர்கள் கண்டிப்பாக பிஎச்.டி படிப்பில் சேர்ந்திருக்கவேண்டும்.

இந்த ஃபெலோஷிப்பைப் பெறும்போது வாரத்துக்கு 8 மணி நேரம் ஐஐஐடி-டீஎம்-மிலல் பணியாற்றவேண்டும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் தங்களது அசிஸ்டண்ட்ஷிப்பை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். பணியாற்றும்போது அவர்களது பணியில் திருப்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த ஃபெலோஷிப் பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை he Registrar Indian Institute of Information Technology Design and Manufacturing, IIITDM Kancheepuram,Off Vandalur Kelambakkam Road, Melakkottaiyur,Chennai - 600 127 என்ற முகவரிக்கும் அனுப்பலாம். ஃபெலோஷிப் பெற நவம்பர் 16-க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iiitdm.ac.in/phd2015/என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

English summary
Indian Institute of Information Technology Design and Manufacturing (IIIT-DM), Kancheepuram has invited applications for Ph.D Assistantship for students pursuing their Doctor of Philosophy (Ph.D) programme in Computer Science and Engineering, Mathematics, Physics, Electronics Engineering and Mechanical Engineering. Scholarships are offered for the session January 2016. Scholarship Details: Candidate should have completed post graduate degree in basic science with NET/GATE qualification or graduate degree in professional course with NET/GATE qualification or post graduate degree in professional courses Rs.25,000/- 1st & 2nd Year Upon successful assessment by the review committee after period of two years scholarship would be offered Rs.28,000/ ( 3rd to 5th year)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia