வடோதரா ஐஐஐடி-யில் எம்.டெக், பிஎச்.டி. படிக்க ஆசையா....!!

Posted By:

டெல்லி: வடோதராவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (ஐஐஐடி) பிஎச்.டி., எம்.டெக் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கையாகும் இது. பிடெக், பி.இ படித்தவர்கள் இந்த எம்.டெக் படிப்பில் சேர முடியும்.

வடோதரா ஐஐஐடி-யில் எம்.டெக், பிஎச்.டி. படிக்க ஆசையா....!!

அதேபோல எம்.டெக், எம்.இ. படித்தவர்கள் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஐஐஐடி வடோதராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.iiitvadodara.ac.in -ல் தொடர்புகொள்ளவேண்டும்.

பின்பு அங்கு விண்ணப்ப பக்கத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பிஎச்.டி படிப்புக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்களை மே 27-க்குள் அனுப்பவேண்டும். ஜூன் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 24-ம் தேதி அறிவிக்கப்படும்.

இறுதியான மாணவர் பட்டியல் ஜூன் 29-ல் வெளியாகும்.

English summary
Applications are invited by Indian Institute of Information Technology (IIIT), Vadodara for admission to Master of Technology (M.Tech) in Computer Science & Engineering and Doctor of Philosophy (Ph.D) in Engineering, Sciences and Humanities and Social Sciences programmes. Admissions are offered for the academic session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia