ஹைதராபாத் ஐஐஐடி- யில் எம்.எஸ்சி, பிஎச்.டி. சேரலாம்!!

Posted By:

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள தி இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (ஐஐஐடி) எம்.எஸ்சி, பிஎச்.டி. படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தெலங்கானா மாநிலத்திலுள்ள ஐ.டி. கல்வி நிறுவனங்களில் முக்கியமானது ஹைதராபாத் ஐஐஐடி. இந்த உயர்கல்வி நிறுவனத்தில் தற்போது பிஎச்.டி., எம்.எஸ்சி பயில அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஹைதராபாத் ஐஐஐடி- யில் எம்.எஸ்சி, பிஎச்.டி. சேரலாம்!!

இந்த படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாளாகும். இந்த படிப்புக்கு விணணப்பிக்க விரும்புபவர்கள் பி.டெக், பி.இ., அல்லது பி.ஆர்க் படிப்பை அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு டிசம்பர் 6-ம் தேதி நடத்தப்படும். டிசம்பர் 7-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். விண்ணப்பக் கட்டணத்தை கிரெட்டி கார்ட், டெபிட் கார்ட் அல்லது நெட் பேங்க்கிங் மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.iiit.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The International Institute of Information Technology (IIIT), Hyderabad invites applications for admissions to Master of Science (M.Sc) by research and Doctor of Philosophy (Ph.D) programmes across various disciplines for the academic session 2016. The entrance exam for the admissions will be held on December 6, 2015. The interview is scheduled on December 7.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia