புதுடெல்லி: ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (ஐஐஐடி) எம்பிஏ படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்புக்கு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்தப் படிப்பு படிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு கடைசி வருடம் படிக்கும் மாணவர்களும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்தவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பிய பின்னர் அதை பிரிண்ட்-அவுட் எடுத்து IIIT, Gothapatna, Malipada, Bhubaneswar - 751 003 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பவேண்டும்.
எக்ஸ்ஏடி, சிஏடி தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் விவரம் இ-மெயிலில் அனுப்பப்படும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி ஏப்ரல் 30-ம் தேதி ஆகும். மே 7 முதல் மே 30 வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். படிப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 7-ம் தேதி அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும். https://sites.google.com/a/iiit-bh.ac.in/admissions/mba-admissions.


Click it and Unblock the Notifications












