சென்னை: அலகாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில்(ஐஐஐடி) எம்பிஏ படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த படிப்பு 4 ஆண்டுகாலமாகும். 2016-ல் படிப்புகள் தொடங்கும். அதற்கான சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு எம்பிஏ மற்றும் பிஎச்.டி. இணைந்து பயிலும் டூயல் கோர்ஸையும் பயிலலாம்.
சிஓடி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புதல் நலம். விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.iiita.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டுதான் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
மார்ச் 28 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாகும். மாணவர்கள் மார்ச் 29-ம் தேதி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். அதன் பின்னர் ஏப்ரல் 9-ம் தேதி குரூப் டிஸ்கஷனுக்கு அழைக்கப்படுவர். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் விவரம் ஐஐஐடி இணையதளத்தில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications

